ஒரு முஸ்லிமும் அவருடைய முஸ்லிமல்லாத நண்பரும் இமெயிலில் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கிறார்கள். எதார்த்தமும் விறுவிறுப்பும் கொண்ட முஸ்லிம் இமெயில்கள் ஃபார்வர்டு செய்யப்பட்டு, பல விவாதங்களைத் தோற்றுவிக்கிறது. அவர் பகத்சிங்கின் ‘நான் நாத்திகன் ஏன்’ புத்தகத்தை ஆக்ரோஷமாக விமர்சிக்கிறார். விவேகானந்தரின் ‘பக்தி யோகம்’ புத்தகத்திற்கும் மறுப்பு எழுதுகிறார். இறைநம்பிக்கை குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். அவருடைய எழுத்தின் ஆதாரத்தன்மை அவருடைய நண்பருக்குள் ஒரு ரசவாதத்தை உண்டுபண்ணுகிறது. அதன் முடிவு என்ன என்பதை ஒவ்வொரு இந்துவும், கிறித்தவரும் மட்டுமின்றி, முஸ்லிமும் தெரிந்துகொள்வது அவசியம். அதற்காக ஒரு தடவை அல்ல, பல தடவை படித்துப் பாதுகாக்க வேண்டிய புத்தகம் இது.