கடந்த நூற்றாண்டின் பேரறிஞர்களில் ஒருவரான இமாம் இப்னு பாஸ் (ரஹ்) சஊதியின் தலைமை முஃப்தியாக இறுதிக்காலம் வரை இருந்தவர். அவர்களின் ஃபத்வாக்கள் அறபியில் பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் பதினேழு தொகுதிகளாய் வெளிவந்துள்ளன. முதல் தொகுதியின் ஆரம்பத்தில் ‘அல்அகீதா அஸ்ஸஹீஹா வமா யுளாதுஹா’ கட்டுரை இடம்பெறுகிறது. மிகச் செறிவான, சுருக்கமான இக்கட்டுரை தனி நூலாகப் பல மொழிகளில் வந்ததுடன், தமிழில் எளிமையாக விவரிக்கப்பட்டும் வெளியாகின்றது.
அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், நபிமார்கள், மறுமைநாள், விதி இவை குறித்த இஸ்லாமிய நம்பிக்கைகளை மிக எளிமையான நடையில் விவரிக்கும் இந்நூல், தவறான நம்பிக்கைகளுக்கு மறுப்பையும் சேர்த்துப் பதிவு செய்கின்றது. குறிப்பாக, தவ்ஹீது, ஷிர்க், குஃப்ர், பித்அத் பற்றிய தெளிவான பார்வையை முன்வைக்கின்றது.