இஸ்லாம் கூறுகிற குடும்ப அமைப்பு மகத்துவம் வாய்ந்தது. குடும்ப அமைப்பை உறுதிப்படுத்தி, பாதுகாக்கிற அனைத்து வழிகளையும் ஷரீஅத் கூறியுள்ளது. தம்பதியினர் அவசியம் பேண வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் தெளிவாகக் கூறியுள்ளது. இவற்றைக் கடைப்பிடித்தால்தான் குடும்பத் தொடர்பு பாசமுள்ளதாகவும் இரக்கமுள்ளதாகவும் அமையும். இஸ்லாம் கூறுகிற வழி மூலமே நிம்மதியான சூழலில் குடும்பத்தினர் வாழ முடியும். இஸ்லாமிய அழகிய வாழ்க்கையே வாரிசுகளுக்கு நற்காரியங்களையும், அழகிய நற்குணங்களையும் கற்றுத் தருகிறது. ஆகவே, கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் நல்லவிதமாகக் குடும்பம் நடத்துவதும், வெறுப்போ தாமதமோ இல்லாமல் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நிறைவேற்றுவதும் கட்டாயக் கடமையாகும்.