முகம், கை கால்களைக் கழுவுவதற்கும் ஒரு புத்தகம் தேவையா?’ என்று நினைக்கும் மனநிலை நம்மிடம் உண்டு. மிக இலகுவானதுதானே எனும் நம்பிக்கையிலிருந்து இக்கேள்வி எழுகிறது. ஆனால், நிதர்சனம் என்னவெனில், இதைச் சரியாகச் செய்ய அறியாதவர்களும் இதுபற்றிய சட்டங்களை அறிவதில் அலட்சியம் காட்டுபவர்களுமே மிகமிக அதிகம். ‘பரிபூரணமான வுளூ’ என்பது நபிவழியில் செய்வதுதான். அது ஒரு வணக்கம். அதை வெறுமனே முகம், கை கால்களைக் கழுவிக்கொள்கிற சடங்கு என நினைக்க முடியாது. ஆன்மிகமாக அதில் நமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது. அவனுக்குக் கீழ்ப்படிவது இருக்கிறது; பாவமன்னிப்பு இருக்கிறது; உறுப்புகளுக்கு ஒளி இருக்கிறது. கறுப்பராக இருந்தாலும் அவருக்கு வெண்மை இருக்கிறது. அதன் மூலம் நபியவர்கள் நம்மை மஹ்ஷர் மைதானத்தில் அடையாளம் கண்டுகொள்வது இருக்கிறது. ஆக, வுளூ என்பதின் தாக்கம் இங்கிருந்து சொர்க்கம் வரை நம்மைத் தொடர்புபடுத்துகிறது. இப்படிப்பட்ட வணக்கத்தை நாம் எவ்வளவு அழகாகச் செய்ய வேண்டும்? அதற்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்? இந்நூலை வாசியுங்கள்; வுளூ செய்யுங்கள்.